கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,596 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது நாட்டில் இதுவரை பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
சிலாங்கூர் 8,549 நேர்வுகளுடன், அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, பினாங்கு முதல் முறையாக 1,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது (1,022).
மேலும், இன்று 164 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 10,019-ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 13,893 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 549 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (8,549), கோலாலம்பூர் (2,163), கெடா (1,446), ஜொகூர் (1,300), சபா (1,062), பினாங்கு (1,022), நெகிரி செம்பிலான் (989), பேராக் (916), கிளந்தான் (772), சரவாக் (759), மலாக்கா (622), திரெங்கானு (501), பகாங் (426), புத்ராஜெயா (50), லாபுவான் (15), பெர்லிஸ் (4).
மேலும் இன்று, 33 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 18 பணியிடத் திரளைகள் ஆகும்.