கடந்த மாதம் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பானின் இளைஞர் தலைவரான ஷாஸ்னி முனீர் முகமது இத்னின் இன்று காலமானார்.
34 வயது கொண்ட அந்த இளைஞர் தலைவர். காய்ச்சலின் காரணத்தினால் இரண்டு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
‘’ தலைவர் ஷாஸ்னியின் உயிர் இழப்பால் நாங்கள் பெரும் துக்கத்தில் இருக்கிறோம். ‘’ என்று அவரின் செயலாளரான அசிம் அப்துல்லா இன்று மதியம் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
கடந்த ஜூலை 24 அன்று, ஷாஸ்னிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பல நாட்களுக்குப் பிறகு அவரின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நுரையீரலின் வீக்கத்தினாலும் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணத்தினாலும் அவர் பலவீனமான நிலையிலிருந்தார்.
முவார் எம்.பி யான சயெட் சடிக்கின் அமனா இளைஞர் தலைவர் இடத்தை இவர் நிரப்பினார்.
2020 ல் நடந்த சிறப்புக் கட்சி தேர்தலில் இவர் அமனாவின் இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டார்.