பாடகி சித்தி சாரா ரைசுதீன் கோவிட் தொற்று நோயால் இன்று அதிகாலை காலமானார்.கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி காலை 5.13க்கு அவர் சுவாசிப்பு பிரச்சனையால் சேன்சலர்துவாங்கு முஹ்ரிஸ் யு.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பொழுது 7 மாதகற்பமாகவும் இருந்தவர், அறுவை சிகிச்சை மூலம் தனது நான்காவது குழந்தையைப்
பாதுகாப்பாகப் பெற்றெடுத்தார்.36 வயது கொண்ட அந்தப் பாடகியின் பிரிவால் கணவர் ஷியுப் சயிட் மற்றும் அவர்களது பிள்ளைகளுமான உவைஸ் அல்கார்னி, டிஸாஹிரா தலிடா ஜஹ்ரா, மற்றும் அரிக் மாடின்
ஆழ்ந்த துக்கத்திற்குள்ளானார்கள்.ஷியுப் சயிட்டும் சித்தி சாராவும் பிப்பரவரி 27, 2011 இல் திருமணம் செய்தனர்.
சித்தி சாராவிற்கு ஆக்சிஜன் அளவு 40 சதவிகிதம்தான் இருந்தது என்று அவரின் கணவர் கூறினார்.ஜூலை 27 அன்று சித்தி சாராவிற்கும் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட்இருப்பதாக கண்டரியப்பட்டது.