பிஎன் கட்சி தலைவர்களுடன் முஹைதீன் இரண்டு மணி நேரம் சந்திப்பு

புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில், தேசியக் கூட்டணியின் (பிஎன்) முக்கியக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் முஹைதீன் யாசின் இன்று இரண்டு மணி நேர சந்திப்பை நடத்தினார்.

சரவாக் முதல்வரும், சரவாக் கூட்டணி கட்சியின் (ஜிபிஎஸ்) தலைவருமான பாதிங்கி அபாங் ஜொஹாரி துன் ஓபேங் மற்றும் மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான டாக்டர் வீ கா சியோங் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பரவிவந்த செய்தியின் அடிப்படையில், பிஎன் கட்சித் தலைவர்களின் சிறப்பு சந்திப்பு இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற அட்டவணை இடப்பட்டது.

இச்சந்திப்பில் பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹாசானும் கலந்துகொண்டார்.

சந்திப்பு குறித்து கருத்துகளைப் பெறக் காத்திருந்த ஊடகங்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன.

கூட்டம் தொடர்பான எந்த விவரங்களும் இல்லை என்றாலும், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையின் வளர்ச்சியுடன் இது தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

  • பெர்னாமா