புதிய அமைச்சரவை இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்தார்.
பெர்னாமாவின் கூற்றுப்படி, யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த வாரம், அம்னோ துணைத் தலைவரான அவர், 114 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினுக்குப் பதிலாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நேற்று, இஸ்தானா நெகாராவில், மாமன்னரின் முன்னிலையில் நாட்டின் ஒன்பதாவது பிரதமராக அவர் பதவியேற்றார்.