பிரித்தானிய பவுண்டுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபாய்

பிரித்தானிய பவுண்டுக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது.

கடந்த 2ஆம் திகதி முதல் இன்று வரையில் நாணயங்களுடன் ஒப்பீட்டளவில் இந்தத் தகவலை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 298. 69 ரூபாயாக காணப்பட்டது. எனினும் இன்றைய தினம் அதன் பெறுமதி 317.47 ரூபாயாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் இன்றைய விற்பனை விலை 273.52 ரூபாயாகவும் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 203 ரூபாயாகவும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி TAMILWIN)