சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒக்சிமீட்டர் தொகை ஒன்று இலங்கை சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் கார்கோ நிறுவத்தின் அதிகாரிகளுக்கு தன்னை பொருட்கள் அகற்றும் பிரிவின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த ஒக்சிமீட்டர் தொகை விடுவிக்கப்பட்டுள்ளன.
பின்னர் சுங்க தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் வௌியேறும் பகுதியில் குறித்த பொருட்கள் தொகை சோதனையிடப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த பொருட்களுக்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி, இலங்கை சுங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், அதனுடன் தொடர்புடைய இறக்குமதி வரி செலுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த பொருட்கள் தொகையை சோதனையிட்டதில் அதில் 21 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 4200 ஒக்சிமீட்டர் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 2,344,642 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (08) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுங்க தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
(நன்றி Adaderana.LK)