இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த எச்சரிக்கை குறிப்பை அமெரிக்கா வெளியிட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் அதனை வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரித்துள்ளன.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கொரோனா நிலை 4 ஆக உயர்வடைந்துள்ளதால், அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேசமயம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகளை நிலை 4 இலிருந்து நிலை 3 ஆக குறைத்துள்ளது.
இது தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்களை அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கும் என கூறப்படுகின்ற அதேவேளை, அவுஸ்திரேலியா நிலை 1 இலிருந்து நிலை 2 க்கு உயர்ந்துள்ளதுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(நன்றி JVP NEWS)