இலங்கையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற தெரிவு செய்யப்பட்ட 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 வீத உத்தரவாதத் தொகையை வைப்பிலிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை உடன் அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி இன்று (09) அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்றைய தினம் (08) கூடி, கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.ஊக வியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதன் ஊடாக, செலாவணி வீத உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு உறுதியாக இருக்கும் என இதனை தாம் நம்புவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(நன்றி BBC TAMIL)