இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதென இந்தியாவின் பிரபல Frontline சஞ்சிகை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பிடியில் இலங்கை சிக்கியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு மாத்திரமின்றி மருந்து தட்டுப்பாடும் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாகவும், சீனி, அரிசி உட்பட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளுக்கு முன்னால் வரிசைகளில் நிற்பதனை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகின்றது.
சிலர் உணவு பற்றாக்குறைக்கு தயாராகியுள்ள நிலையில் பாரிய அளவில் விலையிலும் உணவு பொருட்களை கொள்வனவு செய்வதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் சாதாரண மக்களால் அந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதனை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் பொருளாதாரம் நடவடிக்கை தொடர்பில் அவசர நிலைமையை அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டு இருப்பு குறைந்து வருவதால் நாணய மாற்று விகிதங்கள் பலவீனமடைந்துள்ளதாகவும், இறக்குமதி மற்றும் கடன் தவணைகளை செலுத்த இலங்கை சிரமப்படுவதாகவும், மற்ற நாடுகளில் இருந்து உணவு மற்றும் மருந்து வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(நன்றி JVPNEWS)