21,176 புதிய நேர்வுகள், கெடாவில் ஐசியு படுக்கைகளின் பயன்பாடு அதிகரித்தது

இன்று நண்பகல் நிலவரப்படி, 21,176 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த நேர்வுகளை 1,940,950-ஆக கூட்டியது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஐசியு படுக்கைகளின் பயன்பாடும் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது. கெடாவில் படுக்கைகளின் பயன்பாடு 123.1 விழுக்காடாகப் பதிவாகியுள்ள நிலையில், கிளந்தானில் 95.3 விழுக்காடு, பகாங்கில் 92.4 விழுக்காடு மற்றும் பினாங்கில் 94.5 விழுக்காடு என மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறது.

மேலும், இன்று 341 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 19,827- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 21,476 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 773 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (3,734), சிலாங்கூர் (3,595), ஜொகூர் (2,297), சபா (2,246), பினாங்கு (1,939), கெடா (1,808), பேராக் (1,366), கிளந்தான் (1,254), பகாங் (853), திரெங்கானு (776), மலாக்கா (485), கோலாலம்பூர் (467), நெகிரி செம்பிலான் (252), பெர்லிஸ் (77), புத்ராஜெயா (21), லாபுவான் (6).

மேலும் இன்று, 37 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 16 சமூகப் பரவலுடன் தொடர்புடையது, 30 பணியிடத் திரளைகள் ஆகும்.