எதிர்க்கட்சியிடம் கௌரவமாக வேண்டுவது யாதெனில், கோவிட் பெருந்தொற்றை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்பதேயாகும் என ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பெருந்தொற்று நிலைமை நீடிக்கும் இந்தக் காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்திருந்தால் இந்த நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது. அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி வழங்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது என அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
(நன்றி Tamilwin)