மதுபான விற்பனையை நிறுத்த வேண்டும்! – அமைச்சர் பசிலிடம் அவரச கோரிக்கை

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கு முன்னர் மதுபானங்களை விற்க அனுமதிப்பது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இலங்கை மருத்துவ சங்கம் இந்த விடயத்தை கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் மதுபானங்களை விற்க அனுமதிப்பதால் கோவிட் -19 வைரஸ் பரவல் அதிகரிக்கும், அத்துடன் குடும்ப வன்முறை மற்றும் சாலை விபத்துகள் அதிகரிக்கும் என அந்த சங்கம் கூறியுள்ளது.

இதனால் மதுபான விற்பனையை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சரிடம் மருத்துவ சங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலையில், எந்த வணிக வளாகத்தையும் திறக்க பொருத்தமான சூழல் இல்லையென சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் வைத்தியர ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே, நாளாந்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவதற்கான அடிப்படையை அறிவியல் ரீதியாக விளக்கும் திறன் சுகாதார அமைச்சுக்கு இல்லை என இரசாயன ஆய்வுகூட தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

(நன்றி TAMIL WIN)