14,554 புதிய நேர்வுகள், இம்மாதத்தில் குறைந்த எண்ணிக்கை

சுகாதார அமைச்சு இன்று 14,554 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, ஆர்-நாட் மதிப்பு நாடு முழுமைக்கும் 0.90 ஆக குறைந்தது – இது இம்மாதத்திற்கான மிகக் குறைவானது.

1.00-க்கு கீழே உள்ள மதிப்பு, தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதைக் குறிக்கிறது.

1.00-க்கு மேல் தொற்று மதிப்பு (R-naught) உள்ள மாநிலங்கள், பெர்லிஸ் மற்றும் பஹாங் மட்டுமே.

குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் : 16,751

ஐசியுவில் உள்ள நோயாளிகள் : 1,049

சுவாசக் கருவிகள் தேவைபடும் நோயாளிகள் : 599

இன்று 14,554 புதிய நேர்வுகளில், 98.9 விழுக்காடு (14,391) 1 மற்றும் 2 பிரிவுகளில் உள்ளன – அதாவது அறிகுறிகள் இல்லாமல் மற்றும் இலேசான அறிகுறிகள் கொண்டவை.

மீதமுள்ள 163 நேர்வுகள் (1.1 விழுக்காடு) வகை 3, 4 மற்றும் 5 பிரிவுகளைச் சார்ந்தவை ஆகும்.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் – 2,825 (193,434), சிலாங்கூர் – 2,244 (668,251), ஜொகூர் – 1,807 (187,938), சபா – 1,273 (192,224), பினாங்கு – 1,231 (124,880), பேராக் – 1,144 (96,832), கிளந்தான் – 910 (108,504), கெடா – 908 (130,242), திரெங்கானு – 690 (51,542), பகாங் – 598 (60,558), மலாக்கா – 401 (56,426), கோலாலம்பூர் – 271 (184,522), நெகிரி செம்பிலான் – 157 (96,385), பெர்லிஸ் – 65 (3,549), புத்ராஜெயா – 30 (6,000).

லாபுவானில் இன்று புதிய தொற்றுகள் பதிவாகவில்லை.