கோவிட் -19 தொற்று குறைந்து வரும் போக்கைக் கண்டுள்ளது. கடந்த ஜூலை முதல், 71 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை இது.
சுகாதார அமைச்சு இதனை இன்று அதன் சமூக ஊடகத் தளத்தின் மூலம் தெரிவித்தது.
சரவாக் 2,723 நேர்வுகளுடன் அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைப் பதிவுசெய்த மாநிலமாக இருக்கிறது, அதைத் தொடர்ந்து ஜொகூர் (1,226) மற்றும் கிளந்தான் (983) உள்ளன.
இதற்கிடையில், சிலாங்கூர் 1,000-க்கும் குறைவான நேர்வுகளைப் பதிவு செய்துள்ள நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கு தொடர்ந்து கீழ்நோக்கிய போக்கைப் பதிவு செய்துள்ளது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சரவாக் (2,723), ஜொகூர் (1,226), கிளந்தான் (983), சிலாங்கூர் (979), பினாங்கு (793), சபா (751), பகாங் (739), பேராக் (713), திரெங்கானு (691), கெடா (660), மலாக்கா (346), கோலாலம்பூர் (176), நெகிரி செம்பிலான் (110), பெர்லிஸ் (51), புத்ராஜெயா (18).
லாபுவானில் புதியத் தொற்று எதுவும் பதிவாகவில்லை.