கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் தொற்று மதிப்பு 1.00-க்கும் கீழ்

11,332 புதிய கோவிட் -19 நேர்வுகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, தொற்று மதிப்பு 0.90 ஆக குறைந்தது. செப்டம்பர் 1 முதல் மலேசியா முழுவதும் இது 1.00 என்ற விகிதத்தில் உள்ளது.

1.00-க்கும் குறைவான தொற்று மதிப்பு, கோவிட் -19 பரவுவது குறைந்து வருவதைக் குறிக்கிறது.

பஹாங் மாநிலத்தில் மட்டுமே தொற்று மதிப்பு 1.00 ஆகும். இதைவிட அதிகமான மதிப்பை எந்த மாநிலமும் பதிவு செய்யவில்லை.

செயலில் உள்ள நேர்வுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை நள்ளிரவுக்குப் பிறகு வெளியிடப்படும்.

மாநிலம் வாரியாக, புதிய தொற்றுகளின் எண்ணிக்கை :-

சரவாக் (2,358), ஜொகூர் (1,319), சிலாங்கூர் (1,231), கிளந்தான் (1,088), சபா (965), பினாங்கு (895), கெடா (819), பேராக் (678), பகாங் (677), திரெங்கானு (629), மலாக்கா (303), கோலாலம்பூர் (240), நெகிரி செம்பிலான் (89), புத்ராஜெயா (19), பெர்லிஸ் (19), லாபுவான் (3).