GSP வரிச்சலுகை அடுத்த வருடத்தில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த போட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுகுழுவினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இச்சந்திப்பானது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை (28) இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பங்காளிக் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய உயர்மட்டத் தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்து எம்.ஏ. சுமந்திரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த விடயம், GSP வரிச்சலுகையை இல்லாமல் செய்வதற்கான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய, இலங்கையின் நிலை என்ன என்பதை அறிய ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் வந்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளுக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் கேட்டறிந்ததாக அவர் இதன்போது அவர் தெரிவித்தார்.
(நன்றி JVP NEWS)