கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 400 கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவி்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.

எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை உறுதியளித்ததை போன்று அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை மத்திய வங்கி வழங்கினால், அதனை முழுமையாக ஒரு வாரத்திற்குள் விடுவிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி TAMIL WIN)