நேற்று 12,735 நேர்வுகள், புதன்கிழமை 12,434 நேர்வுகளுடன் ஒப்பிடுகையில், இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 11,889 புதிய கோவிட் -19 நேர்வுகளைச் சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தொற்றுநோயை 2,257,584-ஆகக் கொண்டுவருகிறது.
சரவாக், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே நான்கு இலக்கங்களில் புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
தீபகற்ப மலேசியாவில் 8,602 புதிய நேர்வுகள் அல்லது 72.4 விழுக்காடு, சபா மற்றும் சரவாக்கில் 3,287 புதிய நோய்த்தொற்றுகள் அல்லது 27.6 விழுக்காடு பதிவாகியுள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சரவாக் (2,413), சிலாங்கூர் (1,568), ஜொகூர் (1,217), பேராக் (959), சபா (872), கிளந்தான் (858), பகாங் (831), பினாங்கு (779), கெடா (710), திரெங்கானு (699), மலாக்கா (378), கோலாலம்பூர் (289), நெகிரி செம்பிலான் (197), பெர்லிஸ் (81), புத்ராஜெயா (36), லாபுவான் (2).