9,066 புதிய நேர்வுகள், ஜூலை 12-க்குப் பிறகு மிகக் குறைந்த என்ணிக்கை

சுகாதார அமைச்சு இன்று 9,066 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, ஒட்டுமொத்த நோய்த்தொற்றை 2,277,565-ஆகக் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதிக்குப் பிறகு, இன்று, 83 நாட்களில் மிகக் குறைவான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மேற்கு மலேசியாவில் 6,881 புதிய நேர்வுகள் அல்லது 75.9 விழுக்காடும், கிழக்கு மலேசியாவில் 2,185 புதிய நோய்த்தொற்றுகள் அல்லது 24.1 விழுக்காடும் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (1,418), சிலாங்கூர் (1,000), ஜொகூர் (981), திரெங்கானு (827), கிளந்தான் (796), சபா (767), கெடா (670), பேராக் (669), பகாங் (630), பினாங்கு (620), மலாக்கா (206), கோலாலம்பூர் (201), நெகிரி செம்பிலான் (191), பெர்லிஸ் (66), புத்ராஜெயா (24).

லாபுவானில் இன்று புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.