கடந்த வருடம் முகநூல் ஊடாக பதிவிடப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிலரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் சென்ற அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகுலன் மற்றும் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர் ஒருவருடனும் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
அவர்களுக்கான நீதியான ஒரு விசாரணை இடம்பெற்று அவர்கள் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
கோவிட் சூழல் காரணமாகப் பலரைச் சந்திக்க வாய்ப்பு இல்லதா போதிலும் அரசியல் கைதிகள் தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளோம்.
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஊடகவியலாளர் ஒருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாகத் தான் கவனம் செலுத்தியுள்ளோம்.
மேலும் நாட்டில் உள்ள பயங்கரவாத சட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடக்கம் முகநூலில் பதிவு செய்து சிறை அனுபவிக்கும் அவர்களும் விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(நன்றி TAMIL WIN)