5,745 புதிய கோவிட் -19 நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று 5,745 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,401,866 ஆகும்.

அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சு அடுத்த நாள் கோவிட்நவ் வலைத்தளம் வழியாக, மாநிலம் வாரியான புதிய நேர்வுகளின் விவரங்களை வெளியிடுகிறது.

நேற்று 5,434 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், அக்டோபர் 18, மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (800), ஜொகூர் (698), சரவாக் (694), கிளந்தான் (643), சபா (497), பேராக் (363), கெடா (324), திரெங்கானு (311), பகாங் (253), பினாங்கு (232), கோலாலம்பூர் (223), மலாக்கா (211), நெகிரி செம்பிலான் (151), பெர்லிஸ் (18), புத்ராஜெயா (14), லாபுவான் (2).

திரளைகள்

இன்றுவரை, 634 கோவிட் -19 திரளைகள் இன்னும் செயலில் உள்ளன, இதில் எட்டு புதிய திரளைகள் இன்று பதிவாகியுள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்பு, செயலில் இருந்த 783 திரளைகளைவிட தற்போது 19 விழுக்காடு திரளைகள் குறைந்துள்ளன.

இன்றையப் புதியத் திரளைகளில் ஏழு பணியிடம் சார்ந்தவை (87.5 விழுக்காடு) மற்றும் ஒன்று கல்வி நிறுவனத்தை (12.5 விழுக்காடு) உள்ளடக்கியது.