முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்குத் தண்டணை – கேபிஎம் மறுப்பு

நேற்று முதல் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் ‘கேபிஎம் ஒழுங்குமுறை பிரிவு : தடைசெய்யப்பட்ட தண்டனை வடிவங்கள்’ என்ற அட்டவணை வெளியிடலைக் கல்வி அமைச்சு (கேபிஎம்) மறுத்துள்ளது.

அதன் அமைச்சர் ராட்ஸி ஜிடின், தனது கட்சி ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்றார்.

“நான்தான் அறிக்கையை வெளியிட்டது போல் வலைதளம் என் படத்தை வெளியிட்டது.

“கேபிஎம் -இன் எந்த ஓர் அதிகாரப்பூர்வ ஆவணத்திலும் ‘கேபிஎம் ஒழுங்குமுறை பிரிவு: தடைசெய்யப்பட்ட தண்டனை வடிவங்கள்’ என்ற அட்டவணையைக் கேபிஎம் ஒருபோதும் வெளியிடவில்லை.

“ஒரு செய்தியைப் பரப்புவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்போம்,” என்று அவர் ஒரு முகநூல் இடுகையில் கூறினார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில், ‘கேபிஎம் ஒழுங்குமுறை பிரிவு : தண்டனையின் தடை செய்யப்பட்ட வடிவங்கள்’ என்ற தலைப்பில் ஒரு அட்டவணை காட்சி இருந்தது.

மாணவர்களுக்கு விதிக்கப்படும் தடைசெய்யப்பட்ட தண்டனைகளில் ஒன்றாக ‘வசைபாடுதல்’ வகைப்படுத்தப்பட்டது பலரின் கவனத்திற்கு வந்தது.

அட்டவணையில் ‘தடைசெய்யப்பட்ட’ மற்ற தண்டனைகள் வெயிலில் நீண்ட நேரம் நிற்பது, திடலைச் சுற்றி ஓடுவது மற்றும் வகுப்பறையில் அல்லது வெளியே நீண்ட நேரம் நிற்பது போன்ற உடல் ரீதியான தண்டனைகள் அடங்கும்.

மாணவர்களின் தலைமுடியை வெட்டுவது, அவர்களை நிற்கவைத்து பயிற்சிகள் செய்ய வைப்பது மற்றும் அவர்களின் உடலில் வாசகங்களைத் தொங்கவிடுவது உள்ளிட்ட மன மற்றும் உணர்ச்சிபூர்வமான தண்டனைகள் தடைசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.