நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரையிலான காலகட்டத்தில், ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு மூன்று சென் குறைந்து RM3.05 ஆக இருக்கும்.
நிதி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில், ரோன் 95 மற்றும் டீசலின் சில்லறை விலை, அதே காலகட்டத்தில் லிட்டருக்கு முறையே RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும்.
“உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையை அரசாங்கம் பராமரித்து வருகிறது, இரண்டு பொருட்களின் உண்மையான சந்தை விலைகள் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு விலை அளவை விட உயர்ந்திருந்தாலும்,” என்று அந்த அறிக்கை கூறியது.
உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பெர்னாமா