மனித உரிமைகள் ஆணையரை இலங்கைக்கு அனுப்புகிறது ஐ.நா!

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் வருடாந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், நவநீதம்பிள்ளையின் இலங்கை பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர், இலங்கை குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரும் 25-ம் தேதிக்கு முன்னர் நவநீதம் பிள்ளையிடம் வழங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக ஆராய்ந்த பின்னர் அறிக்கை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் நிலைப்பாட்டை நவநீதம்பிள்ளை அறிவிப்பார் என தெரியவருகிறது.

TAGS: