இலங்கையின் பொருளாதார யுத்தம் ரஷ்ய – உக்ரைன் போரை விட பாரதூரமானது

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் ஏற்பட்டுள்ள போரை விட இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார யுத்தம் பாரதூரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலக நாடுகள் பற்றியோ, வேறு நெருக்கடிகள் தொடர்பாகவோ பேசி விளக்கங்களைக் கூறுவது பலனளிக்காத செயல்.

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை அந்த நிலைமையில் இருந்து எப்படி மீட்பது என்ற விடயத்தையே நாம் சிந்திக்க வேண்டும்.

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந் நிலைமையில், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து, அவர் சிறப்பாக செய்தார், இவர் சிறப்பாக செய்யவில்லை என்று கூறி வேடிக்கை பார்க்காது செயற்பட வேண்டும்.

அத்துடன் நாட்டு மக்களை வாழ வைப்பது தொடர்பாக பிரதான கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

IBC Tamil