நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகள் சகலதும் பாரிய அளவில் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பொதுப்போக்குவரத்து, தொழிற்சாலைகள், தொழில்துறைகள், விவசாயம் என்பன முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் நாடு ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது, நாட்டில் டொலரும் இல்லை ரூபாவுமில்லை, மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை மற்றும் கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
Tamilwin