பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஐ.நா அழுத்தம் கொடுக்கவேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளுகின்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும் என தழிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) வலியுறுத்தியுள்ளார்.

சிறைக் கைதிகளின் உரிமையினை பாதுகாக்கும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பயங்கரவாத தடைச்சடத்தை நீக்கக் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அழுத்தினை ஐ.நா கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கைக்கான ஐ.நா அலுவலக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றும் போராட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்டது.

IBC Tamil