மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் வெராகுரூஸ் பகுதியில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 113 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகிறது.

 

Malaimalar