பாடசாலைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

பாடசாலையில் மாணவர்களை எவ்வாறு அழைப்பது என்பது குறித்து அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

20க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளின் கற்றல் நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களின் மாணவர்களை இரண்டு குழுக்களாக வகுப்பிற்கு அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

40க்கும் முற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களின் மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்து கற்றல் நடவடிக்கைகளுக்காக அவர்களை அழைக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Tamilwin