எரிவாயு தட்டுப்பாடு – 7000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்படும் அபாயம்

நாடளாவிய ரீதியில் 7000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்படும் அபாயம் உள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கு மத்தியில் பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் நடமாடும் பாண் வண்டிகள் உட்பட பல வர்த்தகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எரிவாயு தட்டுப்பாட்டினால் ஏற்கனவே பெருமளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும்,  பேக்கரி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடமாடும் பாண் வண்டிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தற்போது தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Tamilwin