கோவிட்-19 (மார்ச் 17): 27,004 புதிய நேர்வுகள், 86 இறப்புகள்

நேற்று 27,004 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,927,437 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (7,558)

கோலாலம்பூர் (3,266)

பினாங்கு (2,315)

ஜொகூர் (1,990)

கெடா (1,916)

நெகிரி செம்பிலான் (1,882)

பேராக் (1,561)

சரவாக் (1,484)

பகாங் (1,434)

கிளந்தான் (863)

சபா (7696 )

திரங்கானு (764)

மலாக்கா (750)

பெர்லிஸ் (171)

புத்ராஜெயா (150)

லாபுவான் (131)

கோவிட் -19 காரணமாக மேலும் 86 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அதில் 35 பேர் மருத்துவமனை வருவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 34,185 இறப்புகள் கோவிட்-19 க்குக் காரணம்.

இந்த மாதம் 1,436 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன – கடந்த மாதம் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு மற்றும் ஜனவரியில் பதிவான இறப்புகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பேராக் (16) பதிவாகியுள்ளன. சிலாங்கூர் (14), கெடா (10), மலாக்கா (8), ஜொகூர் (7), கிளந்தான் (6), பினாங்கு (6), சபா (6), திரங்கானு(6), நெகிரி செம்பிலான் (4), பகாங் (2) மற்றும் கோலாலம்பூர் (1).

7,856 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 373 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்த கருத்துப்படி, கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சைப் படுக்கைகளின் பயன்பாடு புத்ராஜெயாவில் 100%, பிற மாநிலங்களில் 80% குறைவாகவும் உள்ளது.