இந்த அரசாங்கம் மூன்று ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அசராங்கம் 3043 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.
இதன்படி குறித்த காலப் பகுதியில் பணம் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், இது பாரியளவு தொகையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாத காரணத்தினால், வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளிடமிருந்து 4201 பில்லியன் ரூபா பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை காலம் தாழ்த்தி பெற்றுக்கொள்வதனால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Tamilwin