இந்தியா, சீனாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரியது இலங்கை!

அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவே அவுஸ்திரேலியாவிடம் இருந்து இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருப்பு, பால் மா உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க அவுஸ்திரேலியாவிடம் இருந்து இந்தக் கடன் பெறப்பட உள்ளது.

முன்னதாக, அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை பெற்றிருந்தது. அத்துடன், அண்மையில் சீனாவிடம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin