உக்ரைன் ரஷ்யா போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படும்! – தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலைப் போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படக் கூடும் என்று பேசப்படுவதாக மல்வத்து பீடத்தின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகா தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் ரோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்டவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் சில செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமையே பிரச்சினையாக உள்ளது. நாட்டின் சில பகுதிகள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், அரசாங்கம் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலைப் போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படக் கூடும் என்று பேசப்படுவதாகவும் அவர் கூறினார்.

 

 

Tamilwin