அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி! – விமல், கம்மன்பில போடும் திட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக ஆளும் கூட்டணி கட்சிகளினால் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கையொப்பங்களை திரட்டும் பணிகளில் விமல், உதய தரப்புக்கள் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது 156 வாக்குகளை நாடாளுமன்றில் பெற்றுக்கொண்டது. இந்த எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உதய, விமல் தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிலரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க உதய, விமல் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

Tamilwin