இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பமும் தேசிய மாற்றமும் தேவை என்று கர்தினால் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கை, சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் றிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் செழிப்பை நோக்கி இலங்கையர்கள் தேர்ந்தெடுத்த பாதை உண்மையானதா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் உள்ள கிறிஸ்துவின் வாழும் இரட்சகர் பேராலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் பின்னர் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இன்றைய நம்பிக்கையற்ற சூழ்நிலையானது, இத்தனை ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, குடிமக்களும் செய்த தவறான தேர்வுகளின் விளைவாகும்.
இந்த ஆண்டுகளில், 74 ஆண்டுகளில், ஆசியா நாடுகள் முன்னோக்கி நகர்ந்தபோது இலங்கை நல்லதில் இருந்து கெட்டதை நோக்கி சரிந்துள்ளது
இதன் காரணமாக நாடு இன்று கடுமையான பொருளாதார மற்றும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ளது,
இதற்கு குறுகிய மனப்பான்மையை கொண்ட அரசியல் தேர்வுகளே காரணமாகும்.
Tamilwin