இந்தியாவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள குத்துச்சண்டை வீரர்கள் (PHOTOS)

2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை இந்திய சர்வதேச பரோ குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற யுவதி யோகராசா நிதர்சான தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.

26.03.2022 அன்று தமிழ்நாடு சென்னையில் உள்ள மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற சர்வதேச குத்துசண்டை போட்டியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எஸ்.சிறீதர்சன் ரி.நாகராஜா ஆகியஇரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த ஈ.கிருஸ்ணவேணி வை.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர் .

ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் சில்வர் பதக்கத்தையும் பெற்றுள்ளனர் நிறைப்பிரிவுகள் ஊடாக இந்த போட்டிகள் நடைபெற்றன.

அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

யோகராசா நிதர்சனாவின் செலவுகள் அனைத்தும் தாய்த்தமிழ் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் முதன்மையாக இரு பிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை வீரரை எதிர்த்து களம் கண்ட தமிழக வீரர் பாலீ சதீஷ்வர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சதீஷ்வருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இலங்கை வீரருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

 

 

Tamilwin