இந்த நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் நாடாளுமன்றத்தில் தானாகவே பசில் ராஜபக்சவிற்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்து விடும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இப்போது எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியை பதவி விலக வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர் அப்படி பதவி விலகினால் பசிலுக்கு அதிஷ்டமடித்தது போன்று ஜனாதிபதி பதவி தானாக கிடைத்து விடும். அவருக்கு நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காண்பிக்கவும் முடியுமாகிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilwin