இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக பாகிஸ்தானி;ல் இருந்து கோரப்பட்டிருந்த 200 மில்லியன் டொலர் கடன் திட்டத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் பந்துல குணவர்;த்தன பாகிஸ்தானுக்கு சென்று அந்த நாட்டுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்வைத்ததுடன் கடனையும் கோரியிருந்தார்.
இதேவேளை பங்களாதேஸிடம் ஏற்கனவே 200 மில்லியன் டொலர்களை பெற்று அதன் அதனை திருப்பிச்செலுத்துவதற்கான காலத்தை நீடித்துள்ள இலங்கை, மீண்டும் அந்த நாட்டிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது.
எனினும் இன்றும் அந்த நாடு உரிய பதிலை வழங்கவில்லை.
இதனைதவிர ஒரு பில்லியன் டொலருக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடமும், அவுஸ்திரேலியாவில் இருந்து 200 மில்லியன் டொலர்களையும் இலங்கை கோரியுள்ளது.
Tamilwin