சிறிலங்காவில் அசாதாரண நிலை – தயார் நிலையில் இராணுவம்

சிறிலங்கா இராணுவம் அரசுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க எப்போதும் தயாராக உள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva )தெரிவித்துள்ளார்.

நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் ஆயுதப் படைகள் எப்போதும் அரசியலமைப்பிற்கு இணங்கி செயற்படும் நிலையில், இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம் ஒரு தொழில்முறை அணி என்ற வகையில் அரசுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க எப்போதும் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவை தளமாகக்கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியா, சீனா, இந்தியா, பங்களாதேஷ், ஈரான், ஜப்பான், மாலைதீவு, பாகிஸ்தான், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

 

IBC Tamil