இந்தியாவிடம் பெற்ற கடன் தீர்ந்ததும் எங்களின் கதி என்ன? அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கியுள்ள மற்றுமொரு சங்கம்

நாம் பொருளாதார நிலையில் கடுமையாக வீழ்ச்சியடைந்து மிகவும் அபாயகரமான நிலைமையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் தீர்ந்ததும் எங்களின் கதி என்னவென ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ரொஹான் மசகோரள கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையின் தாக்கம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் பல துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

“மிகவும் அபாயகரமான நிலைமையை நாம் காண்கின்றோம் பொருளாதார நிலை வீழ்ச்சியடைகிறது.இந்தியாவில் இருந்து பெற்ற கடன் தீர்ந்ததும் எங்களின் கதி என்ன?

எனவே நேற்று சபாநாயகர் ஊடாக அரசாங்கம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளோம்.

சரியான அரசியல் பயணம், அமைச்சரவை உள்ளடங்களான ஆட்சி இயந்திரத்தை அமைக்க வேண்டும்.நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு வலையை 11ம் திகதிக்குள் அமைத்து IMF-க்கு செல்ல வேண்டும். இதனை மீறி செயற்படும் பட்சத்தில் இருண்ட படுகுழியில் விழுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Tamilwin