பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது- மகிந்த ராஜபக்சே தகவல்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு தனது அரசு  24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று உறுதியளிக்கிறேன்.

மக்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், தெருக்களில் மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஒவ்வொரு நிமிடமும் இலங்கை விலைமதிப்பற்ற வரவை இழக்கிறது.

எனது குடும்பம் மீது அவதூறு பரப்பப்படுகிறது, அதனை நான் பொறுத்துக் கொள்கிறேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். பாராளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அந்நாட்டு முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ,  அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கை மோசமாகி உள்ளதாக

தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அவரது அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

Malaimalar