மக்களின் அழுத்தங்களுக்கு அடி பணிய மாட்டோம்: எச்சரிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் எவ்வித அழுத்தங்களும் அடிப்பணியாமல் அவசியமான நபர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை நியமியத்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான தாமரை மொட்டு கட்சியின் பிரதான அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர்.

புதுவருடம் நிறைவடைந்தவுடன் உடனடியாக புதிய அமைச்சரவையை நியமித்து பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவையை பெயரிடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டும் அமைச்சுக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

புதிய அமைச்சரவையை நியமித்து, அரசாங்கத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விடுக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளுக்கமைய புதிய அமைச்சரவை நியமனம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பல நிறுவனங்களிடமிருந்து இலங்கை கடன் உதவிகளைப் பெற முயற்சிக்கின்ற நிலையில், கடனுதவி கிடைத்தவுடன் டொலர் பிரச்சினையை தீர்த்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என குறித்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எரிபொருள், எரிவாயு நெருக்கடி மற்றும் மின்வெட்டு முடிந்தவுடன் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

Tamilwin