தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை – வெளியாகியுள்ள தகவல்

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 113.19 இந்திய ரூபாயாகவும், நேபாளத்தில் 158.76 ரூபாயாகவும், பாகிஸ்தானில் 152.06 ரூபாயாகவும், வங்கதேசத்தில் 87.49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில், தற்போது நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 289 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது 339.99 ஆக பதிவாகியுள்ளது.

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, உலகில் டொலருக்கு நிகரான நாணயமாக இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மதிப்பிழப்பின் அடிப்படையில் இலங்கை சூடானுக்கு சற்று கீழே உள்ளது. சூடான் பவுண்டின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 447.50 ஆக பதிவாகியுள்ளது.

 

 

Tamilwin