தலைவர்கள் மக்களின் அவல நிலையை உணரவில்லை – சரத் பொன்சேகா ஆதங்கம்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் சார்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அர்த்தமற்ற விவாதங்களை நடத்துவதற்கு இப்போது நேரமில்லை என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சரத் பொன்சேகா, நாட்டின் தலைவர்கள் மக்களின் அவல நிலையை உணரவில்லை. மாறாக, ஆடம்பர வாழ்க்கையை வாழத் தேர்ந்தெடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தலைவர்களின் நடவடிக்கைகளால் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் தற்போது பொறுமையின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டாலும், அரசாங்கம் மக்களின் தேவைகளை காதுகொடுத்து கேட்காத நிலையில் உள்ளதாக சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

IBC Tamil