இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தவறியதாக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வகையில் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது மூத்த சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சே மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1000 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தெருக்கள் மற்றும் வர்த்தக சந்தைகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே போராட்டமும் நடைபெற்றது.
Malaimalar