சிறுவர்கள் மத்தியில் சளி, இருமல், நிமோனியா! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவத்துறை!

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கையின் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

சிறுவர்களுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் .தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் தரம் 01 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 02 வருடங்களாக வெளியில் வராத சிறுவர்கள் தற்போது சுற்றுச்சூழலுக்குள் வந்துள்ளனர்.

இந்தநிலையில் சிறிய சளி சிறுவர்களிடையே வேகமாகப் பரவக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களை மருத்துவர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.

ஏனெனில் அவர்களுக்கு காய்ச்சல், பிற வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் கொரோனா கூட தொற்றியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

IBC Tamil