இலங்கையின் நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் கட்சி தலைவர்களின் சிறப்புக்கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமாகியுள்ளது
இந்தநிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முனைப்புக்கள் குறித்து பல தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும் , போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில் நாடாளுமன்றம் தமக்கு உரிய பணியை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
Tamilwin