பாணந்துறை கொசல்வத்தை சிறி ஜினதர்மதான பாடசாலையின் அதிபரது அலுவலகம் மற்றும் கணினி ஆய்வு கூடம் ஆகியவற்றை அந்த பாடசாலையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தீயிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் போரில் 12 மற்றும் 9 வயது மாணவர்களை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயில் கணினி ஆய்வுக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கணினிகள், உப மென் பொருட்கள், மின் விளக்குகள், பாடப் புத்தகங்கள், அதிபரின் நாற்காலி, விருதுகள் அழிந்து போயுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது பாடசாலை மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைக்கு மேல் எழுந்த புகையை கண்ட பிரதேசவாதிகள் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயை வைப்பதற்காக செனிடைசர் திரவத்தை பயன்படுத்தியதாகவும் சிலர் வழங்கிய ஆலோசனைக்கு வழங்கிய தாம் தீயை வைத்ததாகவும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் காவல்துறையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
IBC Tamil